"எனக்கு வேலை கிடைத்துவிட்டது"... செல்போனில் பேசியபடி பேருந்தை ஓட்டிய தற்காலிக ஓட்டுநர்

வேலை கிடைத்துவிட்டது என செல்போனில் நண்பர்களிடம் பேசியபடி, தற்காலிக ஒட்டுநர் ஒருவர் பேருந்தை இயக்கினார். கடலூரில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி சென்ற அரசு பேருந்தை செல்போனில் பேசியவாறு தற்காலிக ஓட்டுநர் ஓட்டினார். பேருந்து, தான் ஓட்டுவதற்கு சரியாக இல்லை என்றும், இன்றுடன் அந்த பேருந்தை விட்டுவிடுவேன் என்றும் அவர் கூறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனிடையே, கடலூரில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு வேறொரு தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசு பேருந்து, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

X

Thanthi TV
www.thanthitv.com