"எனக்கு பணம் வேணாம்.. நீதி தான் வேணும்.." - காலில் விழுந்து கதறிய தந்தை
முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என, தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வேங்கைபட்டியில், சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர் அஸ்விந்த் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது பெற்றோரை நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆறுதல் கூறி,பாஜக சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கினார். அப்போது, உயிரிழந்த மாணவனின் தநதை, தனக்கு நீதி தான் வேண்டும்..., பணம் வேண்டாம் என வாங்க மறுத்து, நயினார் நாகேந்திரனின் காலில் விழுந்தார்.பின்னர் பெற்றோரை பா.ஜ.க நிர்வாகிகள் சமாதானப்படுத்தி பணத்தை வழங்கினர்.
Next Story