``மன்னிப்பு கேட்க முடியாது’’.. விஜயை மீண்டும் அட்டாக் செய்த வேல்முருகன்
அரசியல் ஆதாயத்திற்காகவே நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இளம்பெண்கள் குறித்து அவர் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். மேலும் முழு பேச்சையும் கேட்காமல் மன்னிப்பு கோருபவர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது எனவும் தெரிவித்தார். மேலும் நடிகர் விஜய் அரசியல் ஆதயத்திற்காகவே கல்வி விருது நிகழ்ச்சி நடத்துகிறார் என தெரிவித்தார்.
Next Story
