"இதற்கு மேலும் டைம் தர முடியாது".. நாளை முதல் ரேபிடோ, ஓலா பைக் டாக்ஸி ஓட கூடாது.. KA ஐகோர்ட் அதிரடி

x

கர்நாடகாவில் பைக் டேக்சி சேவைக்கு தடை- ஜூன் 16 முதல் அமல்

கர்நாடகாவில் bike taxi சேவைக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், வரும் 16-ஆம் தேதி முதல் சேவை நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்மாநிலத்தில் ஓலா, உபர், ரேபிடோ போன்ற bike taxi சேவைகளை நெறிப்படுத்த, மாநில அரசு 6 வாரங்களில் விதிகளை உருவாக்க வேண்டும் என்றும், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஷியாம் பிரசாத், கடந்த ஏப்ரல் 2-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். மேலும், 6 வாரங்களில் பைக் டாக்ஸி சேவையை நிறுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து, bike taxi நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி காமேஸ்வர் ராவ் தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. விதிகளை உருவாக்க மாநில அரசுக்கு வழங்கிய அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைவதால், மேலும், அவகாசம் வழங்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால், வரும் திங்கள்கிழமை முதல் bike taxi சேவை நிறுத்தப்பட உள்ளது. இதனால், bike taxi சேவையை பயன்படுத்துவோர் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்