நீலகிரி மாணவியின் வெற்றிக்கு காரணம்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற நீலகிரி மாணவி சௌந்தர்யாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன..கூடலூர் முத்தமிழ் நகர் பகுதியில் வசிக்கும் முத்து, கீதா தம்பதியின் மகள் சௌந்தர்யா கடந்த 6 மாதத்திற்கு முன்பு டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று கூடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நான் முதல்வன் திட்டம் மூலம் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாரான செளந்தர்யா, தற்போது 897-வது இடத்தைப் பிடித்து நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இதனால் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story
