கணவர் சாவில் மர்மம் இருப்பதாக மனைவி புகார்- உறவினர்கள் சாலை மறியல்

கணவர் சாவில் மர்மம் இருப்பதாக மனைவி புகார்- உறவினர்கள் சாலை மறியல்
Published on

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே, கணவர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மனைவியும், உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Vovt

திட்டக்குடி அருகே உள்ள கீழக்கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பவருக்கும், பாரதி என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 14 வயதில் மகள் இருக்கிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், திட்டக்குடி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, தங்கதுரைக்கும் இருளம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கணவரை இழந்த ஒரு பெண்ணுக்கும் தவறான தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. அந்த பெண் குஜராத்திற்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில், அந்த வீட்டிற்கு தங்கதுரை அடிக்கடி சென்று தங்கி வந்துள்ளார். இந்நிலையில்,

அந்த வீட்டில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதைனைக்குப் பிறகு அவருடைய உலை, அவருடைய தந்தை பெற்றுச் சென்று ஊருக்கு கொண்டு வராமல் இறுதிச் சடங்கு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த தங்கதுரையின் மனைவி மற்றும் உறவினர்கள், கீழ்கல்பூண்டியில் இருந்து தொழுதூர் செல்லும் சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்ப இடத்துக்கு சென்ற ராமநத்தம் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com