Husband Wife Murder| தாத்தா, பாட்டி கிடந்த கோலம்.. பார்த்ததும் அலறிய சாப்பாடு கொடுக்க வந்த பேரன்
முதிய தம்பதி அடித்துக் கொலை - ஓமலூரில் அதிர்ச்சி சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே முதிய தம்பதியை அடித்துக் கொலை செய்துவிட்டு, நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.... ராமப்ப கொட்டாய் பகுதியை சேர்ந்த ஜெயராமன்-அமராவதி தம்பதி தனியாக வசித்து வந்துள்ளனர்... இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் முதிய தம்பதியின் பேரன் உணவு கொடுக்க வந்துள்ளார்... அப்போது இருவரும் தலையில் பலத்த காயத்துடன் பேச்சு மூச்சின்றி கிடப்பதை பார்த்ததும் பேரன் அலறியுள்ளார்... தகவல் அறிந்து வந்த தீவட்டிப்பட்டி போலீசார் தம்பதியின் உடலை மீட்டனர்... சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் நேரில் வந்து விசாரித்த நிலையில், மூதாட்டியின் நகைகள் திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது... முதிய தம்பதியை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்...
