மருத்துவமனையில் இருந்த மனைவியை பார்க்க சென்று ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்ட கணவன் கணவன்
குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை, கணவர் கத்தியால் குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி பகுதியைச் சேர்ந்த விஷ்ரூத் என்பவர், 27 வயதான ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறில் ஸ்ருதியை தாக்கியுள்ளார். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ருதியை பார்க்க சென்ற கணவர் விஷ்ரூத், மூன்று இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில் ஸ்ருதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தப்பி ஓடிய கணவர் விஷ்ரூத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
