அதிகாலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவி.. விஷயம் கைமீறியதால் கதை முடித்த கணவன்

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே திருமணம் தாண்டிய உறவை கைவிட மறுத்த மனைவியை கொலை செய்து தப்பியோடிய முதியவரை போலீசார் கைது செய்தனர். கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்த 70 வயதான பாலகிருஷ்ணன், தனது மனைவி இந்திராவுடன் வசித்து வந்தார். இந்திராவுக்கு அவரது உறவினருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தம்பதிக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், அதிகாலை இந்திராவை கழுத்தை அறுத்து கொலை செய்த முதியவர், இந்திராவின் சகோதரி மாரியம்மாள் வீட்டிற்கு தீ வைத்து தப்பினார். தொடர்ந்து பெங்களூருவுக்கு தப்பி செல்ல இருந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்