பொங்கல் பரிசுத் தொகையை தர மறுத்ததால் மனைவியை கொலை செய்த கணவன்

உசிலம்பட்டி அருகே பொங்கல் பரிசுத் தொகையான ஆயிரம் ரூபாயை தர மறுத்த மனைவியை கணவனே கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகையை தர மறுத்ததால் மனைவியை கொலை செய்த கணவன்
Published on
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையைச் சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி ராஜாத்தி. 3 பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் வசித்து வந்தனர். எந்த வேலைக்கும் செல்லாமல் ராமர் வீட்டில் இருந்து வந்ததோடு அடிக்கடி பணம் கேட்டு ராஜாத்தியை தொல்லை செய்து வந்துள்ளார். பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் பணத்தை மனைவியிடம் ராமர் கேட்டுள்ளார். ஆனால் அதனை அவர் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமர், தன் மனைவியை அரிவாளால் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ராமரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com