மனைவியை கொன்று விட்டு பயத்தில் தற்கொலை செய்த கணவர்

மனைவியை கொலை செய்து விட்டு கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை கொன்று விட்டு பயத்தில் தற்கொலை செய்த கணவர்
Published on
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் துர்கா என்பவரும் சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்த நிலையில், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், குழந்தைகளை துர்காவின் தாய் மீராபாய் அழைத்துச் சென்றுள்ளார். இன்று காலை குழந்தைகளை அழைத்துக் கொண்டு மீராபாய் வந்துள்ளார். அப்போது, வெங்கடேசன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருக்க, அவருக்கு கீழே துர்கா பிணமாகக் கிடந்தார். இதையடுத்து மீராபாய் அளித்த தகவலின் பேரில், போலீசார் வந்து இருவரின் உடலையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன், மனைவியிடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது, துர்காவை தலையணையால் வெங்கடேசன் அழுத்திக் கொலை செய்து விட்டு போலீசாருக்கு பயந்து தானும் தற்கொலை செய்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com