சென்னை |அம்பத்தூர்|மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை
கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவியைக் கொலை செய்து கணவர் தற்கொலை
ஏழு ஆண்டுகளாகக் குழந்தை இல்லை, நிரந்தர வேலையும் இல்லை என மன உளைச்சல் – இரண்டு நாட்களுக்குப் பிறகு வீட்டில் அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு
சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அருண்குமார் (41), அவரது மனைவி மாலதி (38) ஆகியோர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர்.
2018-ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், ஏழு ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமலும், நிரந்தர வேலைவாய்ப்பின்றியும் குடும்பத்தை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை அவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளனர். அப்போது அருண்குமார் தூக்கிட்ட நிலையில் இருந்ததைக் கண்டு கொரட்டூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
