மனைவியின் தகாத உறவு: கணவர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு

x


மனைவியின் தகாத உறவு: கணவர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை மனைவி கைவிட மறுத்ததால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்டார். பூவளம்பேடு கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் கணேஷ், கடந்த 2-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்கொலைக்கு முன் கண்ணீருடன் அவர் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. அதில், தனது மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாகவும், அது உறுதியானதால்தான் இந்த சோக முடிவை எடுத்ததாகவும் கண்ணீருடன் பேசியுள்ளார். தனது குழந்தைகளை பார்த்துக் கொள்ளும்படி பெற்றோருக்கு கோரிக்கை விடுத்த அவர், தனது தம்பியை நன்றாக படிக்குமாறு கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்