மதுபோதையில் தகராறு செய்த கணவன்..மண்டையை உடைத்து கொன்ற மனைவி.. போலீஸ் அதிரடி

x

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர், தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். சம்னவத்தன்று இரவில் குடிபோதையில் மனைவி சரண்யாயோடு சண்டை இட்டிருக்கிறார். அப்போது சரண்யா மூங்கில் கட்டையால் தலையில் அடித்ததில் படுகாயமடைந்த சந்திர சேகர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டிருக்கிறார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீஸார் சரண்யாவை கைது செய்திருக்கிறார்கள்.

கடந்த வருடம் இவர்களது மகன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனது குறிப்பிடதக்கது.


Next Story

மேலும் செய்திகள்