திருமணமான 9 நாட்களில் மனைவியை கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை

x

சென்னை மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் விஜய். தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் இவர், அதே நிறுவனத்தில் பணியாற்றும் யுவஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து கடந்த 13 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியாக வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் யுவஸ்ரீ முகத்தில் தலையனை வைத்து அழுத்தி விஜய் கொலை செய்து விட்டு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், விஜய் யுவஸ்ரீ இருவரும் பதிவு திருமணம் செய்ததை, விஜய் அவரது தாயாரிடம் கூறியுள்ளார். இதற்கு அவரது பெற்றோர்கள் சம்மதிக்காததால், இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்