வயலில் வைத்து மனைவியை அடித்து கொன்ற கணவன்...

மனைவியை அடித்து கொன்றுவிட்டு கணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
வயலில் வைத்து மனைவியை அடித்து கொன்ற கணவன்...
Published on
அரியலூர் மாவட்டம் சன்னாவூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற விவசாயி, தனது மனைவி சுகன்யாவை வயலில் வேலைக்கு சென்ற இடத்தில் அடித்து கொன்றுள்ளார். சுகன்யாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த‌தாக கூறப்படுகிறது. வயலில் இருவரும் வேலை செய்துகொண்டிருக்கும் போது வாக்குவாத‌ம் முற்றவே, மணிகண்டன், சுகன்யாவை அடித்து கொன்றுவிட்டு தானும் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com