மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற கணவன்
திருவொற்றியூரில் மனைவியை கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர், டி.எஸ்.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ரகு, ரேவதி தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தம்பதிக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவ தினத்தன்று வழக்கம் போல சண்டை வந்த நிலையில், ரகு, மனைவி ரேவதியை குத்தி கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், ரேவதியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர், வீட்டில் இருந்த ரகு தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். பின்னர் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
