மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது...
சென்னை அசோக் நகரைச் சேர்ந்த அண்ணாமலை, ஓய்வு பெற்ற மத்திய தணிக்கை துறை அதிகாரி. இவரது மனைவி வீட்டை, தமது பெயரில் எழுதி வைக்க கோரி அவ்வப்போது தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம், இதே போல் தகராறு ஏற்பட, தமது மனைவியை பூரிக்கட்டையாலும், இஞ்சி நசுக்க பயன்படும் கருங்கல் கொண்டு சரமாரியாக தாக்கி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பின்னர் மகள் கவிதா பணி முடிந்து வீட்டிற்கு வந்த போது, எதுவும் தெரியாதது போல் கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் தனது மனைவியை மர்மநபர் கொலை செய்து விட்டு 15 சவரன் நகைகளை கொள்ளையடித்ததாக கணவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அண்ணாமலை மீது சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் கேள்வி கேட்டதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து மனைவியை கொலை செய்த அண்ணாமலையை, கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
