திருவள்ளூர்||கணவன், மனைவி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து பலி

கணவன், மனைவி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து பலி

திருவள்ளூர் அருகே கணவன், மனைவி

பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காக்களூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி யுவராஜ், மஞ்சுளா என்பவரைக் காதலித்து கடந்த 2025-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

யுவராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு ஏற்பட்ட தகராறில் மஞ்சுளா பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்ததாகவும், இதைக் கண்ட யுவராஜும் அதே மருந்தைக் குடித்ததாகவும் கூறப்படுகிறது. இருவரும் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த இருவரும் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com