ஊருக்கு கணவன்,மனைவி.. ஆனா வீட்டுக்குள்.. விஷயம் அறிந்ததும் அதிர்ச்சியில் தாய்

x

சென்னையில் கணவன்-மனைவி எனக் கூறி வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த காதலன், காதலி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், கண்ணாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞரும், அதே பகுதியைச் சேர்ந்த அபிநயா என்ற இளம்பெண்ணும், விழுப்புரம் அரசு கலை கல்லூரியில் படித்தபோது, காதலித்து வந்துள்ளனர். சென்னைக்கு வந்த இருவரும், கணவன்- மனைவி எனக் கூறி, பெரம்பூர் ராஜீவ் காந்தி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், ஆகாஷ் தூக்கிட்ட நிலையிலும், அபிநயா உடலில் ரத்தக் காயங்களுடனும் சடலமாக மீட்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்