குழந்தை இல்லையென துன்புறுத்திய கணவன் குடும்பம் - மனைவி தற்கொலை

x

குழந்தை இல்லை என்பதை சுட்டிகாட்டி கணவர் வீட்டார் தொடர்ந்து அவமானப்படுத்தியதால்,திருமணமான இளம்பெண், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.

காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெமீலா. இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லை என்பதால் கணவர் பெனோவின் தாய், தந்தை, தங்கை உள்ளிட்டவர்கள் தொடர்ந்து துன்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தன் தாய் வீடான சகாயபுரத்திற்கு சென்றிருந்தபோது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும், தன் தாய்க்கு எழுதி வைத்த கடிதத்தில், கணவர் தன் மீது அன்பாக இல்லை என்றும், தான் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்