தவழும் 21 வயது மகன்...18 வயது மகள்...பிறந்தது முதல் இன்றுவரை சுமக்கும் கொடுமை... கண்ணீர் கதை

தவழும் 21 வயது மகன்...18 வயது மகள்...

பிறந்தது முதல் இன்றுவரை சுமக்கும் கொடுமை

கண்முன்னே வாழும் கடவுளாய் தாய், தந்தை

பெற்றெடுத்த நாள் முதல், சுமார் 21 வருடங்களாக தன் பிள்ளைகளின் கால் தரையில் தீண்டாமல் சுமந்து வருகிறார்கள் பெற்றோர் இருவர். உருக்கமான இதன் பின்னணியை விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

தோளுக்கு மேல் வளர்ந்த இரு பிள்ளைகளையும்... மார்பிலும், மடியிலும் அரவணைத்து கனத்த இதயத்துடன் சுமந்து வருகிறார் இந்த தந்தை...

இருவரின் கால் பாதங்களும் இன்னும் இந்த பூமியை தீண்டி பார்க்கவில்லை.. ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தம்பதி நாராயணன் - யசோதா...

ஆடு மேய்க்கும் கூலி தொழித் தொழிலாளிகளான இவர்களுக்கு, பிரவீன்குமார் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்...

இருவரும் பிறக்கும்போதே, இரு கால்களும் செயலிழந்த நிலையில் பிறந்திருக்கின்றனர்...

பிறந்த குழந்தையை எப்படி ஒரு பெற்றோர் கவனிப்பார்களோ.. அப்படித்தான் தற்போது வரை தங்களின் பிள்ளைகளை கவனித்து வருகின்றனர் இருவரும்..

குளிக்க வைப்பது, கழிவறைக்கு அழைத்து செல்வது என பிள்ளைகளின் அன்றாட கடமைகள் அனைத்தையும் சுமந்து வருகின்றனர்.

இந்நிலையில்தான், தனக்கு ஆட்டோ மேட்டிக்கில் இயங்கும் மாற்றுத்திறனாளிக்கான மோட்டார் சைக்கிளை அரசு வழங்கினால் பெற்றோரின் சுமையை சற்று குறைப்பேன் என வேதனை தெரிவிக்கிறார் பிரவீன்குமார்.

தினமும் வீட்டிற்கு வந்து செல்லும் நண்பர்களை பார்க்கும் போது, அவர்களை போல கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும் என ஆசை இருக்கிறதாம் பிரவீன்குமாருக்கு.

கூலித்தொழிலாளிகாளான பெற்றோர், இரு பிள்ளைகளையும் எப்படியாவது நடக்க வைத்து விட வேண்டும் என ஆடு மாடுகளை மேய்த்தும், 100 நாள் வேலைக்கு சென்றும் போராடி வந்த நிலையில், தற்போது அவர்கள் அரசின் உதவியை நாடி இருக்கின்றனர்.

காண்போரின் இதயத்தையும் கணத்துப்போகச் செய்யும் இந்த குடும்பத்திற்கு, அரசு உதவி செய்து கை கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்....

X

Thanthi TV
www.thanthitv.com