பத்திரிகை செய்தி அடிப்படையில், தாமாக முன்வந்து, மாநில மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், 100 நாள் வேலையில் கிடைக்கும் கூலியை மட்டுமே 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரமாக கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சூழலில், கடந்த ஆறு மாதமாக அவர்களுக்கு சம்பளம் வழங்காதது ஏன் என அதில் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக 4 வாரங்களில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளர், இயக்குனர் அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.