திருச்செந்தூர் கடலில் தென்பட்ட மனித எலும்புகள் - பக்தர்கள் அதிர்ச்சி

x

திருச்செந்தூர் கோயில் முன்புள்ள கடற்கரையில் மனித எலும்புகள் கிடந்த நிலையில், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயில் எதிரில், கடல் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் இரண்டு மனித எலும்புகள் கிடந்த நிலையில் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு காவலில் இருந்த போலீசார், எலும்புகளை பார்வையிட்ட நிலையில், கோயில் நிர்வாக ஊழியர்கள் அதனை மணலை கொண்டு மூடினர்.


Next Story

மேலும் செய்திகள்