Ayudha Poojai| கூட்டம் கூட்டமாக குவியும் மக்கள்

கூட்டம் கூட்டமாக குவியும் மக்கள்

#ayudhapoojai #ramanathapuramnews

ராமநாதபுரம் பஜாரில் குவிந்த மக்கள் – பூஜைப் பொருட்கள் விற்பனை மும்முரம் ஆயுத பூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் அரண்மனை பஜார் பகுதியில் பூஜைப் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகாலை முதலே குவிந்தனர். ஆயுத பூஜை கொண்டாடத் தேவையான தேங்காய், பழங்கள், பூ மாலைகள், வாழை இலைகள், அவல், பொரி, கடலை உள்ளிட்ட பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. மேலும், கார் மற்றும் இருசக்கர வாகனங்களைச் சுத்தம் செய்து வழிபடுவதற்கான பொருட்களையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். பூக்கள் மற்றும் மாலைகளின் விலை வழக்கத்தைவிட சற்று அதிகரித்திருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பூஜைப் பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால், அரண்மனை பஜார் பகுதியில் பண்டிகைக் கால விற்பனை களைகட்டியது.

X

Thanthi TV
www.thanthitv.com