Purattasi Perumal புரட்டாசி 2வது சனிக்கிழமையில்.. ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாளை காண பெருங்கூட்டம்
Purattasi Perumal புரட்டாசி 2வது சனிக்கிழமையில்.. ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாளை காண பெருங்கூட்டம்
#srivilliputhur #purattasi #perumaltemple
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில், புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, ஸ்ரீநிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். காலை 10.30 மணிக்கு ஸ்ரீநிவாச பெருமாள் ஆண்டாள் கோவிலில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மலை கிரிவலம் வர உள்ளார். டிஎஸ்பி பாலசுந்தரம் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
