சொர்க்கவாசல் திறப்பின்போது பெரும் பரபரப்பு - போலீசை கத்தியோடு துரத்திய நபர்..
திருப்பூர் வீரராகவ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பின்போது ராமகிருஷணன் என்ற காவலரை, மதுபோதையில் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியால் தாக்குவதற்கு துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு அவரை, போலீசார் மடக்கி பிடித்து கத்தி, மிளகாய்த்தூள் உள்ளிட்டவையை பறிமுதல் செய்தனர். பின்பு அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், தஞ்சாவூரை சேர்ந்த இளங்கோ என தெரியவந்தது. இதில், காவலர் ராமகிருஷ்ணன் நூலிழையில் உயிர்த் தப்பினார்.
Next Story
