

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே அனுமதி இல்லாமல் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய எச்.ராஜா, பீகார் தேர்தலில் தங்களை தோற்கடிக்க, காங்கிரஸ் நக்சலைட் உடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறினார். இதனை அடுத்து அனுமதி இன்றி வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடத்தியதாக கூறி, எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர்.