"திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?" - மத்திய அமைச்சர் L முருகன் கேள்வி
திமுக அரசிடம் மத்திய அமைச்சர் L முருகன் கேள்வி
திமுக அரசின் விளம்பர அரசியலை தென் மாவட்ட மக்கள் நம்பப் போவதில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்... தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்களுக்கு தங்கள் பெயரில் ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டிக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், முதலீடுகளை ஈர்ப்பதாக கூறி முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களாலும், தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகளாலும் எந்த பயனும் இல்லை என விமர்சித்தார்... தமிழகத்தில் இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு எந்தெந்த நிறுவனங்கள் தொழிற்சாலையைத் தொடங்கி உள்ளன?
அதன் தற்போதைய நிலை என்ன? முதலீடு மாநாடு நடத்தி கிடைத்த பயன் என்ன? இவற்றையெல்லாம் தமிழக மக்களுக்கு திமுக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்... தமிழகத்துக்கு வந்த முதலீடுகள் குறித்து மக்களுக்குத் தெரியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்...
