+2 தேர்வில் எத்தனை பேர் தோல்வி? | தேர்வுக்கு வராதவர்கள் எத்தனை?

தமிழகத்தில் நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 39 ஆயிரத்து 352 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். மொத்தம் 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர் தேர்வு எழுதிய நிலையில் 7 லட்சத்து 53 ஆயிரத்து142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 39 ஆயிரத்து 352 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களோடு, தேர்வுக்கு வராதவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 49 ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக 49 ஆயிரத்து 401 மாணவர்கள் துணைத் தேர்வை எழுத இருக்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com