மடமடவென இடிக்கப்பட்ட வீடுகள் - அதிரடி காட்டிய அதிகாரிகள்.. கலங்க வைத்த சம்பவம்
கிருஷ்ணகிரியில், திருக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரசித்தி பெற்ற பிரசன்ன பார்வதி சமேத சந்திர மௌளீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, 9 குடும்பங்கள் வீடுகள் கட்டியிருந்தன. இக்கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கண்காணிப்பில் உள்ள நிலையில், ஆக்கிமிப்பை அகற்ற உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, அங்கு குடியிருந்தவர்கள் வீட்டினை காலி செய்த நிலையில், ஜேசிபி இயந்திரம் கொண்டு வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
Next Story
