டெல்லியில் இடிக்கப்பட்ட தமிழர்களின் வீடுகள் - தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரண தெகுப்பு
டெல்லியில் உள்ள மதராசி முகாம் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் 150 பேருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரண தெகுப்பு வழங்கப்பட்டது. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அமைச்சர் நாசர், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 8 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். பின்னர், கோதுமை மாவு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்சைப் பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், மிளகாய் தூள், உப்பு, மல்லித்தூள், அரிசி, டீத்தூள் உள்ளிட்ட 15 அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டன.
Next Story
