பற்றி எரிந்த வீடுகள் - ``5 நாளா நடுத்தெருவுல நிக்குறோம்''.. கதறி அழுத மக்கள்
சிதம்பரம் அருகே மீதிகுடி பகுதியில் தாழ்வாக சென்ற மின்கம்பிகள் உரசியதில் மூன்று குடிசை வீடுகள் தீயில் எரிந்து 5 நாட்கள் ஆன நிலையில், அரசு உதவவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த தீ விபத்தில் 20 சவரன் நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. 5 நாட்கள் கடந்த நிலையில், அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story