தங்குவதற்கு வீடு இல்லாமல் அவதிப்படும் நரிக்குறவ மக்கள்...
வேலூர் மாவட்டம் பத்திரப்பல்லி கிராமம் அருகே வீடுகள் பாழடைந்து அவதிபடுவதாக கூறும் நரிக்குறவர் இன மக்கள் அரசுக்கு விடும் கோரிக்கைகள்
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு அரசின் மூலமாக வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த வீடுகள் அனைத்தும் இடிந்த நிலையில் உள்ளன. மழைக்காலங்களில் முழுவதுமாக தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து அவர்கள் தங்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. வீடுகள் முழுவதும் சேதமடைந்திருப்பதால் கூரைகள் பெயர்ந்து விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.
