நிலத்தகராறில் வீடு இடிப்பு- பதிலுக்கு தாக்குதல் நடத்திய எதிர் தரப்பு
நிலத்தகராறில் வீடு இடிப்பு- பதிலுக்கு தாக்குதல் நடத்திய எதிர் தரப்பு
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, நிலத்தகராறில் வீட்டை இடித்து விட்டு தப்பிச் சென்றவர்களின் வாகனத்தை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கி சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலையை அடுத்த ருத்ராபாளையத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வரும் நிலையில், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அங்குள்ள நிலத்தில் வசிப்பவர்களை மற்றொரு தரப்பினர் காலி செய்ய வலியுறுத்தி வந்த நிலையில், வேன் மற்றும் கார்களில் 50க்கும் மேற்பட்ட ஆட்களுடன் சென்று வீட்டை இடித்து விட்டு, அங்கு வசிப்பவர்களையும் தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றனர்.
இதையறிந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தப்பிச் செல்ல முயன்றவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களின் வாகனங்களை தாக்கி சேதப்படுத்தினர்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க அமராவதி ஆற்றில் குதித்த மூன்று பேரில் ஒருவர் மட்டுமே கரையேறிய நிலையில், மணிகண்டன் என்பவரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். வீட்டை இடித்த தரப்பைச் சேர்ந்த 5 பேர் மட்டுமே பிடிபட்ட நிலையில், மற்றவர்கள் தப்பியோடி விட்டனர். 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
