சிலிண்டர் கசிவால் எரிந்த வீடு - மதுரையில் அதிர்ச்சி
மதுரையில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருங்காலக்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளியான அப்துல்முத்தலிபு தனக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் வசித்து வந்துள்ளார். சிலிண்டர் கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, வீட்டின் மேற்கூரை எரிய ஆரம்பித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். சிலிண்டரையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். தீ அணைக்கப்பட்டாலும் வீடு முழுமையாக சேதமடைந்ததால் அப்துல்முத்தலிபு மனைவி, குழந்தைகளுடன் தவித்து வருகிறார்.
Next Story