"வீட்டின் பால்கனி இடிந்து விபத்து - மெட்ரோ பணிகள் காரணமல்ல" - மெட்ரோ நிர்வாகம்
Chennai Metro | "வீட்டின் பால்கனி இடிந்து விபத்து - மெட்ரோ பணிகள் காரணமல்ல" - மெட்ரோ நிர்வாகம் விளக்கம்
சென்னை நொச்சிக்குப்பத்தில் வீட்டின் பால்கனி மற்றும் படிக்கட்டுகள் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் பணிகளால் தான், குடியிருப்புகளில் விரிசல்கள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த விபத்தில் 9 வயது சிறுமி உட்பட 2 பெரியவர்கள் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில், சம்பவத்தின் போது நூலிழையில் உயிர் தப்பியதாக அப்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள், தொடர்கதையாகி வருவதாக குற்றம்சாட்டிய அந்த பகுதியினர், இதுகுறித்து உடனடியாக உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
