தோற்றத்தை வைத்து அவமரியாதை.. கொதித்தெழுந்த வாடிக்கையாளர் - சென்னை அருகே பரபரப்பு
திருவள்ளூரில் பிரபல உணவகத்தில், தோற்றத்தை வைத்து தன்னை அவமதித்ததாக கூறி, வாடிக்கையாளர் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூரில் உள்ள பிரபல சைவ உணவகத்திற்கு, வழக்கறிஞரான விஷ்ணுவரதன் சாப்பிட சென்றுள்ளார். அவரது தோற்றத்தை வைத்து, அங்கிருந்த பணியாளர் ஒருவர் சாப்பிட பணம் இருக்கிறதா? என கேட்டு, விஷ்ணுவரதனை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட விஷ்ணுவரதனை போலீசார் சமாதானப்படுத்தினர். பின்பு உணவக ஊழியர் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, விஷ்ணுவரதன் போராட்டத்தை கைவிட்டார்.
Next Story