வேலையை விட்டுச் சென்ற மாற்றுத்திறனாளி ஊழியரை கடுமையாக தாக்கிய உரிமையாளர்...

வேடசந்தூரில், வேலையை விட்டு, நின்றுவிட்ட மாற்றுத்திறனாளி ஊழியரை, உணவக உரிமையாளர் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார்.
வேலையை விட்டுச் சென்ற மாற்றுத்திறனாளி ஊழியரை கடுமையாக தாக்கிய உரிமையாளர்...
Published on

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த வேலுமணி என்பவர், உணவகம் ஒன்றில் சர்வராக வேலை செய்து வருகிறார். மாற்றுத்திறனாளியான வேலுமணி, ஏற்கனவே வேறொரு உணவகத்தில் வேலை பார்த்து வந்ததாகவும், அதனை விட்டுவிட்டு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் புதிய உணவகத்தில் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. வேலுமணி வேலையை விட்டு வந்ததால், ஆத்திரமடைந்த பழைய உணவகத்தின் உரிமையாளர் ராமகிருஷ்ணன், வேலுமணி தற்போது பணிபுரிந்து வரும் புதிய உணவகத்திற்கு சென்று, அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com