"விசாரணை என்ற பெயரில் போலீசார் டார்ச்சர்" - பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை முயற்சி

ஒசூர் அருகே விசாரணை என்ற பெயரில் போலீசார் டார்ச்சர் செய்வதாக கூறி பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
"விசாரணை என்ற பெயரில் போலீசார் டார்ச்சர்" - பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை முயற்சி
Published on

ஒசூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி மரகதம். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். ராதாகிருஷ்ணன் மேல் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவரை போலீசார் அடிக்கடி விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றுள்ளனர். மேலும் சமீபத்தில் திமுக நிர்வாகி கொலை வழக்கிலும் ராதாகிருஷ்ணனை விசாரிக்க சென்ற நிலையில் அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரின் மனைவி மரகதம் மற்றும் மகனை போலீசார் அடிக்கடி விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் . இதனால் விரக்தி அடைந்த மரகதம், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com