2015ஆம் ஆண்டில் ஜீவசமாதி அடைய முயன்ற சாமியார் - அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

2015ஆம் ஆண்டில் ஜீவசமாதி அடைய முயன்ற சாமியார் - அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
2015ஆம் ஆண்டில் ஜீவசமாதி அடைய முயன்ற சாமியார் - அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
Published on

ஒசூர் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள எஸ்.குருப்பட்டி கிராமத்தை சேர்ந்த சாமியார் மாராச்சாரி. 90 வயதான இவர், 2015ல் ஜீவசமாதி அடைய விரும்பியதால் அதனை தன் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அதற்கான பணிகளில் குடும்பத்தினர் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த தகவல் அந்த பகுதியில் பரவியது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாட்சியர் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஜீவசமாதி அடைவதற்காக வெட்டப்பட்ட குழிகளை மூடிய அதிகாரிகள் ஜீவசமாதி அடைய எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர் அங்கிருந்து கர்நாடகாவிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதுவரை அவர் என்ன ஆனார் என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. கடந்த 2015ல் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி இந்த சம்பவம் நடந்த நிலையில் தற்போது மீண்டும் சிவகங்கையில் ஜீவசமாதி அடையும் நிகழ்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது

X

Thanthi TV
www.thanthitv.com