Hosur | POCSO case | வாயை பொத்தி தூக்கிச் சென்ற மர்ம நபர் | 4ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்
Hosur | POCSO case | வாயை பொத்தி தூக்கிச் சென்ற மர்ம நபர் | 4ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்
மலை கிராமத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - 3 தனிப்படைகள் அமைப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மலை கிராமத்தில், பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த விவகாரத்தில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய நான்காம் வகுப்பு மாணவிக்கு மர்ம நபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 12-ஆம் தேதி மாலை நடந்த இந்த சம்பவத்தில், மாணவியை வாயை பொத்தி தூக்கிச் சென்ற மர்ம நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியை கைது செய்ய தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்தராஜ் , காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்
