

கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் கன்னட கொடிகளுடன் சென்ற கர்நாடக மாநில வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார், கொடியை அகற்ற சொன்னதாக கூறப்படுகிறது. இதற்கு தெரிவித்த அவர்கள் போராட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மீண்டும் கன்னட அமைப்பினர் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் போராட்டத்தை நடத்தினர். தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களில் வந்தவர்களுக்கு ரோஜாப்பூக்களை கொடுத்த அவர்கள், கையில் இருந்த தடியையும் காட்டினர். இந்த போராட்டத்தால் மாநில எல்லைப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.