ஒசூர் அருகே குடும்ப தகராறில் பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு, தாயும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடகரை மலைக்கிராமத்தில் வசித்து வரும் பசவராஜின் குடிபழக்கத்தால், அவருக்கு அவரது மனைவி நாகம்மாவிற்கு இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று குடித்துவிட்டு வந்த கணவனுடன் சண்டையிட்ட நாகம்மா குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இன்று காலை அவர்களை தேடியபோது, பெலமரபோடு என்ற இடத்திலுள்ள கிணற்றில் மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.