ஒசூர் அருகே கௌரி கணபதி கோயில் மரத்தேர் திருவிழா

ஒசூர் அருகே கும்ளாபுரம் கிராமத்தில் உள்ள கவுரி மற்றும் கணபதி கோயிலில் தேர் திருவிழா நடைபெற்றது.
ஒசூர் அருகே கௌரி கணபதி கோயில் மரத்தேர் திருவிழா
Published on

ஒசூர் அருகே கும்ளாபுரம் கிராமத்தில் உள்ள கவுரி மற்றும் கணபதி கோயிலில் தேர் திருவிழா நடைபெற்றது. காப்பு கட்டிய பக்தர்கள் கவுரி மற்றும் கணபதி தெய்வங்களை களி மண்ணால் செய்து, மரத்தால் ஆன தேரையும் வடிவமைத்தனர். அதைதொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மரத்தேரில் அமர வைத்தனர். தங்கள் கைகளிலும் தோள்களிலும் பக்தர்கள் தேரை சுமந்தப்படி, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். இந்த திருவிழாவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com