

ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 50க்கும் மேற்பட்ட யானைகளை, வனத்துறையினர், தேன்கனிகோட்டைக்கு விரட்டி சென்றனர். அதை வேடிக்கை பார்ப்பதற்காக வந்த ஏராளமான இளைஞர்கள் அவற்றை பின் தொடர்ந்தனர். யானை கூட்டம் உத்தனப்பள்ளி கெலமங்கலம் சாலையில் சென்றபோது, கூட்டத்திருந்து பிரிந்த ஒற்றை யானை, தங்களை பின்தொடர்ந்த இளைஞர்களை ஆவேசத்துடன் துரத்தியது. இதனால், உயிர்பயத்தில் அவர்கள் தலைதெறிக்க ஓடினர். யானையின் கால்களின் நடுவே, மரணத்தில் வாயிலில் சிக்கியவர் பிழைத்த பதைபதைப்பான காட்சி நெஞ்சை உறைய வைக்கிறது.