மனநலம் பாதித்த 9 வயது சிறுமியிடம் அத்துமீறிய பெரியப்பா போக்சோ சட்டத்தில் கைது

ஒசூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய சிறுமியின் பெரியப்பா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனநலம் பாதித்த 9 வயது சிறுமியிடம் அத்துமீறிய பெரியப்பா போக்சோ சட்டத்தில் கைது
Published on

ஒசூர் அருகே அஞ்செட்டி அடுத்துள்ள தக்கட்டி மலைக்கிராமத்தை சேர்ந்த திம்மராயன், தனது சகோதர‌ரின் 9 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை சாதகமாக பயன்படுத்தி திம்மராயன் அவ்வப்போது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இதனை தற்செயலாக மற்றொரு சிறுமி நேரில் பார்த்து வெளியே கூறியதால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து அஞ்செட்டி காவல்துறையினர் திம்மராயனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com