நெடுஞ்சாலைகளில் "பைக் வீலிங்" : இளைஞர்கள் அடாவடி - விபத்தில் சிக்கும் அப்பாவி வாகன ஓட்டிகள்

ஓசூர் நெடுஞ்சாலை பகுதிகளில், இளைஞர்கள் இருசக்கரவாகனங்களில் வீலிங் என்ற பெயரில் விபரீத சாகசங்கள் செய்துவருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஓசூர் முதல் சூளகிரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில், தலைக்கவசம் கூட அணியாமல் பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த சாகசங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இவர்களின் சாகசங்களால் அப்பாவி வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com