நிற்க கூட இடம் இல்லாமல் நிரம்பி வழியும் அரசு மருத்துவமனை - திடீர்னு என்னாச்சு?

சீர்காழி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும்

வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருந்ததால், சிகிச்சைக்காக வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பொதுமக்களின் சிரமத்தை போக்க சீர்காழி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com