சென்னை ரயிலில் பயங்கரம் - அதிர்ச்சியில் அலறிய பெண்
பெண்ணிடம் செயின் பறித்த இளைஞர் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த புண்ணியமூர்த்தி-தங்க பரிமளா தம்பதி கண் சிகிச்சைக்காக பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்து கொண்டிருந்தனர். பேசின் பிரிட்ஜ் அருகே ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர்தங்க பரிமளா கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார். பிடித்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
